கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது- ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி லால் விஜயநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்துகள் தொடர்பான அடிபடை நடவடிக்கைகள் கூட இன்னமும் தயாராகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை விட சிறிய நாடுகள் கூட மருந்துகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் மருந்துகளை கொண்டுவருவது அவற்றை சேமிப்பது அவற்றை விநியோகிப்பது போன்ற விடயங்களிற்கு திட்டமிடவேண்டும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருந்தினை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் கட்டுப்படுத்தப்படவில்லை நாட்டில் தொடர்ந்து பரவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி உறுப்பினர் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என லால்விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply