புதிய இடங்களிலும் கொரோனா பரவல்- சுகாதார அதிகாரி

மேல்மாகாணம் உட்பட பல பகுதிகளில் கொரோனாவைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவத்தொடங்கியுள்ளது என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்திலும் கொழும்பிலும் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் சில பகுதிகளில் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது இதனை நாங்கள் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வைரசினை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் வியாழக்கிழமை முதல் நீண்ட விடுமுறை வருவதன் காரணமாக மக்களை தங்கள் பகுதிகளில் இருந்து வேறு இடங்களிற்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply