திருகோணமலையில் தனிமைப்படுத்தப்படும் பிரதேசம்!

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவின் மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர பிரிவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினரின் அறவுறுதலதல்களுக்கிணங்க குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவை தனிமைப்படுத்தல் பிரிவாக பிரகடனப்படுத்த அவசியமான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தல் இன்று நடைபெற்ற கொவிட் 19 கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மாவட்ட கொவிட் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கிராம உத்தியோகத்தர் பிரிவை தனிமைப்படுத்துவதன் மூலம் கொவிட் தொற்று ஏனைய பிரதேசங்களுக்கு வியாபிக்கா வண்ணம் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் இக்கூட்டத்தின் போது தெரிவித்ததாகவும் அதற்கிணங்க குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply