இறைச்சிக் கடைகளின் அனுமதியை இரத்து செய்ய நடவடிக்கை

மூதூர் பிரதேசத்தில் இறைச்சிக்கடை நடாத்தும் வியாபாரிகள் பொதுச் சுகாதார முறைகளை கடைப்பிடித்து நடந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.எம்.கஸ்ஸாலியின் தலைமையில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸின் ஏற்பாட்டில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன் கூட்டம் நடைபெற்றது.

சுகாதாரம் பேணல், கழிவுகளை முறையாக அகற்றல், கொண்டு செல்லலில் தனிநபர் சுகாதாரம் பேணல், வேலையாட்கள், காசாளர், விநியோகிஸ்தர் மற்றும் நுகர்வோர் முறையான முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் நடைமுறைப்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளதுடன், இந்நிபந்தனைகளை செய்யத்தவறும் பட்சத்தில் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply