வவுனியாவில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடல்

வவுனியாவில் திடீரென அதிகரித்து வருகின்ற கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விசேட கலந்துரையாடலில் பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர், மதத் தலைவர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply