இன்று முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் -கல்வி அமைச்சு

மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய இடங் களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங் களைத் தவிர ஏனைய இடங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் கற்றல் செயற் பாடுகளுக்காகத் திறக்கப்படுகின்றன.

அதன்படி, தரம் 02 முதல் 13 ஆம் வகுப்பு வரை யிலான பாடசாலைகள் இன்றைய தினம் கற்றல் செயற்பாடுகளுக்காகத் திறக்கப்படுகின்றன.

அதேநேரம் மேல் மாகாணத்தில் தனிமைப் படுத்தப் படாத பிரதேசங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 11ஆம் தரத்துக்கான கல்வி செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொவிட்-19 கொரோனா தொற்று பரவலையும் கட்டுப்படுத்திக் கொண்டு, மாணவர்களின் பாது காப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், புதிய வழமையின் கீழ் சுகாதார அறிவுறுத்தல்களுடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் பாடசாலைகளுக்கான முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் செயற் பாடுகளும் ஆரம்பமாகவுள்ளன.

உரிய திட்டங்களின் அடிப்படையிலேயே இன்றைய தினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அறிவுறுத்தல்கள் உரிய வகையில் பின் பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கட்டம் கட்டமாகக் கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply