கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 543 பேரில் 217 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

அதன் படி கொரோனா இரண்டாவது அலையின் போது கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 980 ஆக அதிகரி த்துள்ளது.

பொரளை பகுதியில் 69 பேர், கம்பஹா மாவட்டத்தில் 85 பேர், இரத்தின புரி மாவட்டத்தில் 40 பேர், காலி மாவட்ட த்தில் 26 பேர் , கண்டி மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள னர் .

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 08 பேர், களுத்துறை மாவட்டத்தில் 08 பேர், மாத்தறை மாவட் டத்தில் 06 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர் .

Be the first to comment

Leave a Reply