காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 12வயது சிறுமி!

மட்டக்களப்பு பெரியகல்லாறு -2 நாவலர் வீதி பகுதியில் சிறுமி ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறும, தாய் வெளிநாடு சென்ற நிலையில் தனது தாயின் சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த சிறுமி நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் மரணம் குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply