மேலதிக வகுப்புக்கள் நடத்தலாமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதி கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாத்திரமின்றி அனைத்து உலக நாடுகளிலம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் அனைத்து நாடுகளும் மாணவர்களின் நலன் கருதி கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்துள்ளது. எனினும் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வகையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply