வவுனியாவில் இஞ்சி, மஞ்சள் செய்கை முன்மாதிரி முயற்சிக்கு வெற்றி

வவுனியா புளியங்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிரி இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கை வெற்றியளித்துள்ள நிலையில் அது தொடர்பான வயல் விழா நிகழ்வு நேற்று இடம்பெற்றிருந்தது.

புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இரு கண்களிலும் பார்வையை இழந்த தவராசா என்ற விவசாயி கடந்த வருடம் மஞ்சள் மற்றும் இஞ்சி செய்கையில் ஈடுபட்டிருந்தார். தற்போது அது செய்கை பண்ணப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அறுவடை நிலைக்குத் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் அது தொடர்பான வயல் விழா நிகழ்வு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அருந்ததி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, பிரதேச சபை தவிசாளர் ச.தணிகாசலம், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply