இறுதிச் சடங்கில் ஏற்பட்ட தர்க்கம்: வாகனத்தால் மோதி கொலை செய்யப்பட்ட பெண்

பெண் ஒருவரை வாகனத்தில் மோதி மரணித்த சம்பவம் மத்துகம வெலிமானான பகுதியில் பதிவாகியுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொாலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் டதெரியவருகையில்.

மத்துகம வெலிமானான பகுதியில் மரண சடங்கொன்றில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிந்துள்ளது.

இதனையடுத்தே குறித்த பெண் வாகனத்தில் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply