நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா

Positive blood test result for the new rapidly spreading Coronavirus, originating in Wuhan, China

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 532 பேரில் 226 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

அவிசாவெல்லப் பகுதியில் அமைந்துள்ள ஆடை தொழிற் சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 35 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 72 பேர் நேற்றைய தினம் தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 33 பேர் போகம் பறை சிறைக்கைதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 50 பேர் நேற்றைய தினம் தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதில் 13 பேர் நீர்கொழும்பு சிறைக்கைதிகள்.

காலி மாவட்டத்தில் 46 பேர் நேற்றைய தினம் தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதில் 39 பேர் காலி சிறைக்கைதிகள்.

களுத்துறை மாவட்டத்தில் 31 பேர், கேகாலை மாவட் டத்தில் 16 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பேர், மாத் தறை மாவட்டத்தில் 15 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 14 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 12 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 08பேர், இரத்தின புரி மாவட் டத்தில் 08 பேர், மாத்தளை மாவட்டத்தில் 05 பேர், அனுராத புர மாவட்டத்தில் 03 பேர்,  நுவரெலியா மாவட் டத்தில் 02 பேர் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply