
யாழ். வந்த தானியங்கி பி.சி.ஆர். இயந்திரம் வழிமறிக்கப்பட்டு கொழும்புக்கு மாற்றம் கஜேந்திரன் எம் பி
யாழ். வந்த தானியங்கி பி.சி.ஆர். இயந்திரம் வழிமறிக்கப்பட்டு கொழும்புக்கு மாற்றப்பட்டது!யாழ்பாணம் பொது வைத்தியசாலைக்கு என தருவிக்கப்பட்ட 10 மில்லியன் பெறுமதியான தானியங்கி பி.சி.ஆர். இயந்திரம் யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த நிலையில் நடுவழியில் மறிக்கப்பட்டு கொழும்பு ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது அப்பட்டமான இனவாத நடவடிக்கை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கொரோனா தொற்று நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு பேம்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வந்துகொண்டிரு;த பி.சி.ஆர். இயந்திரம் புத்தளத்தில் வைத்து இடை மறியக்கப்பட்டு ஜெயவர்த்தனபுரவுக்கு மாற்றப்பட்ட செயற்பாடு சுகாதார அமைச்சின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது.
இலங்கையில் உள்ள மாவட்டபொது மற்றும் போதானா வைத்தியசாலைகளில் தானியங்கி பி.சி.ஆர். இயந்திரம் இல்லாம ஒரே வைத்தியசாலையாக யாழ். போதானா வைத்தியசாலை உள்ளது.
எனவே, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையிலேம் இனவாத நோக்குடன் செயற்படாமல் உரிய வசதிகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் கஜேந்திரன் எம்.பி. வுலியுறுத்தினார்
Be the first to comment