முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க தனது முகவரியாக அலரிமாளியை குறிப்பிட்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வி

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது முகவரியாக அலரி மாளிகை முகவரியை பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான விவாதம் இடம்பெற்றது.

தனது இல்லம் என அலரி மாளிகையை உதயங்க பயன்படுத்துவதற்கு என்ன உரிமையுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

உதயங்க வீரதுங்க தனது முகவரி இலக்கம் 3, அலரி மாளிகை எனக் குறிப்பிட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜயசிறி சுட்டிக்காட்டினார்.

ஏனைய இராஜதந்திரிகளும அந்த முகவரியை பயன்படுத்தலாமா என அவர் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் வளங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்கத்தின் நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது புலனாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply