இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 522 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 521திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள் ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 248 ஆக உயர்ந் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 39,023 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித் துள்ளது.

Be the first to comment

Leave a Reply