சிசு செரிய பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – கிங்ஸ்லி ரணவக

எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலை களை மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிப்பதால் மாணவர்களுக்கு அதிகபட்ச போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சிசு செரிய பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக ஈடு படுத்தப்பட்டுள்ள ´பாசல் சிசு செரிய´ பஸ்கள் பற்றாக் குறையாக நிலவும் பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலைக்குத் தேவையான பஸ்களை குறித்த டிப் போவில் இருந்து பெற்றுக் கொள்ளத் தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந் துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply