எதிர்கட்சி தலைவரை பைத்தியம் என தெரிவித்தார் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – நாடாளுமன்றத்தில் இன்று

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவரை பைத்தியம் என அழைத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பின்னர் அதனை வாபஸ் பெற்றார்.
பாடசாலை மாணவர்களிற்கு சீருடையை விநியோகிப்பது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியவேளையே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சஜித்பிரேமதாசவை பைத்தியம் என குறிப்பிட்டார்.

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளித்த பின்னரும் எதிர்கட்சி தலைவர் அது குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றார் என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

தன்னை அமைச்சர் அவ்வாறு அழைத்தது குறித்து எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தனது கருத்தினை வாபஸ்பெற்ற அதேவேளை ரணில்விக்கிரமசிங்க ஒரு முறை சஜித்பிரேமதாசவை முட்டாள் என தெரிவித்தார் என குறிப்பிட்டார்.
எனினும் அதற்கு பதிலளிக்காத சஜித்பிரேமதாச அரசாங்கம் பாடசாலை சீருடை விடயத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றது என குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply