கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒருபோதும் கையளிக்கப்போவதில்லை- பிரதமர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்த வெளிநாட்டு நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகளை வெளிநாட்டு நிறுவனத்திடமோ அல்லது வெளிநாட்டிடமோ ஒருபோதும் கையளிக்கப்போவதில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply