யாழ்மாவட்ட நுழைவாயில்களில் துரித அன்டிஜன் சோதனை-அரசாங்க அதிபர்

யாழ்மாவட்ட நுழைவாயில்களில் விரைவில் கொரோனா தொற்றை கண்டறியும் துரித அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளனன என யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விடயத்தில் மிகவும் கவனமாக செயற்படவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் அபாய வலயங்களில் இருந்து வருபவர்கள் தங்கள் விபரங்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்மாவட்டத்தில் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் துரித அன்டிஜென் சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்மாவட்டத்தின் நுழைவாயில்களில குறிப்பாக ஆனையிறவு சங்குப்பிட்டி போன்ற இடங்களில் துரித அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply