தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாங்கள் தயார்- சார்ல்ஸ் நிர்மலநாதன்

தமிழ் அரசியல் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாங்கள் தயார் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பதற்காக அவர்கள் அனைவரையும் உடனடியாக பிணையில் விடுதலை செய்யவேண்டும் என அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை செய்பவர்களிற்கு பிணையாளர்களாகயிருப்பதற்கு நாங்கள் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து தமிழ் அரசின் உயிர்களை பாதுகாக்கவேண்டியதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இடம்பெற்றது உரிமை போர் என குறிப்பிட்டுள்ள அவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடு;த்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளிற்கு கொரோனாஆபத்து உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply