மாத்தளையில் கரும்புலியின் சடலம் மீட்பு! விசாரணையில் வெளியான தகவல்கள்

மாத்தளை பிரதேசத்தில் மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் கரும்புலியொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட கரும்புலிக்கு நஞ்சூட்டப்பட்டதனாலேயே உயிரிழந்துள்ளதாக மரணப் பரிசோதனைகளிலிருந்து தொிய வந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மின்நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உயிரிழந்த கருபுலியின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டு பலத்த நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மாத்தளை மாவட்டத்தினுள் உயிரிழந்த இரண்டாவது கரும்புலி இது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply