
கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடையத்தொடங்கியுள்ளது ஆனால் உடனடியாக எந்த முடிவிற்கும் வரமுடியாது என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொதுசுகாதார சேவையின் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள் அடுத்த சில நாட்களிற்கு நிலைமையை உன்னிப்பாகஅவதானித்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றதா என்பது குறித்த முடிவிற்கு வரவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கைi குறைக்கவேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தோம்,மேலும் தொடர்ச்சியாக பணியாற்றிய சுகாதார பணியாளர்கள் களைப்படைந்திருந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்களிற்கு சிறிது ஓய்வைவழங்கவேண்டியிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மீண்டும் பிசிஆர் சோதனையின் அளவை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதை உறுதி செய்யவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be the first to comment