எரியுண்ட நிலையில் பௌத்தமதகுருவின் சடலம் மீட்பு- நால்வர் கைது

ஹன்வெலவில் பௌத்தமதகுரு ஒருவரை கடத்திக்கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெணணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி இரண்டாம் திகதி உடுவில தர்மசிறி தேரர் கடத்தப்பட்டுள்ளார் என இரண்டாம் திகதி முறைப்பாடு கிடைத்தது என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கொட்டதெனியாவ நாவன்ன மயானத்தில் பௌத்த மதகுருவின் எரியுண்ட நிலையில் காணப்பட்ட உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேப்பரிசோதனையின் போது அது காணாமல்போன மதகுருவின் உடல் என்பது உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வானையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவருக்கும் பௌத்தமதகுருவிற்கும் இடையிலான தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply