யாழ்.பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னம் மாயம்!

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள் அண்மையில் தமக்காக தயாரித்துக்கொண்ட ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னத்தை மாற்றியமைத்துள்ளனர்.

ரி-சேர்ட் இல் நந்தி சின்னம் வரவேண்டிய இடத்தில்அது அகற்றப்பட்டு UJ என்ற எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விசாரித்தபோது, ஏற்கனவே சிங்கள மாணவர்களால் இச்சின்னம் மாற்றப்பட்டதாகவும் அதையே மருத்துவபீட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் சிங்கள மாணவர்களால் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட சின்னத்துடன் பல்கலைக்கழகத்தின் பெயரில் தயாரித்து மாணவர்கள் அல்லாத வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமையும் தெரியவருகின்றது.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் இலட்சினையை மாற்றியமைக்க யார் இவர்களுக்கு அனுமதி வழங்கியது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்விமான்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply