164 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 164 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, அபுதாபிலிருந்து 66 பேர், கட்டாரிலிருந்து 93 பேர், சீனாவிலிருந்து 5 பேர், கட்டு நாயக்க விமான நிலை யத்தை இன்றுகாலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தவிர மேலும் 269 பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.

அதன்படி, கட்டாரிலிருந்து 245 பேர், இந்தியாவிலிருந்து 03 பேர், இந்தோனேசியாவிலிருந்து 07 பேர் மற்றும் சிங்கப் பூரிலிருந்து 14 பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply