மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாள் இன்று

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாள் இன்று..!!
05.01.2000 ம் ஆண்டில் இலங்கை நாட்டின் தலைநகரில் வைத்து சுட்டுப்படுகொலை செயப்பட்ட சிறந்தசட்டத்தரணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்ச்சியின் முன்நாள் தலைவரும் தமிழ் தேசிய அரசியலின் தனித்துவம் மிக்க தலவர்களுள் ஒருவருமான மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களின் தேசவிடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்து இன்றுடன் பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றது..!

சிங்கள இனவாத தேசத்தின் குகைக்குள் இருந்துகொண்டு சட்டத்திற்கு புறம்பானவகையில் தமிழர்களைத் தொல்லை தந்த ‘பாஸ்’ நடைமுறை மற்றும் அடையாள அட்டைகளுடன் உலாவ வேண்டும் என்ற படையினரின் உத்தரவுகளை தான் நேரடியாகச் சந்திக்கும்போது அவற்றிக்குப் பணிய மறுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு சட்டரீதியாகச் சவால்கள் விடுத்தார்.

ஆயுதப்போராட்டத்தின் பிறப்புப்பற்றியும், அதன் தவிர்க்க முடியாத தேவை பற்றியும் உலகப் பிரமுகர்களுக்கும் விளக்கி . தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அம்பலபப்டுத்தி, அவற்றை சர்வதேச மனித உரிமைக் கழகங்களிடம் எடுத்துச் சென்றார்.

அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தேசவிடுதலைக்கு ஆற்றவேண்டிய பங்களிப்புகள் பற்றி விளக்கி. எமது இனத்தின் அறிவுஜீவிகளுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்த மாமனிதர் . குமார் பொன்னம்பலம் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளுடன் மட்டுமன்றி பேரினவாதத்திற்கு ஏவல் செய்யும் தமிழ்க்குழுக்களுக்கும் எதிராகவும் அவர் காட்டமானவகையில் தனது எதிர்புணர்வைக் காட்டினார்…..

இவ்வாறு களத்திலும் புலத்திலுமாக தமிழ் தேச விடுதலையை தன் நேச்சிலேசுமந்த்து பணியாற்றிய ஒரு தமிழ்தேசிய அரசியல்தலைவரை “விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்” என தேசியத் தலைவர் அவர்கள் புகழாரம் சூட்டி “மாமனிதர்” எனும் அதியுயர் விருதினையும் வழங்கி மதிப்பளித்தார் ….

Be the first to comment

Leave a Reply