
தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் சிக்கி காருடன் மூழ்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அரேக்விபா என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாலத்தின் அடியில் சென்ற கார் ஒன்று நீருக்குள் முழுமையாக மூழ்கியது. அந்தக் காரில் பயணம் செய்து உயிருக்குப் போராடியவரே பத்திரமாக மீட்கப்பட்டார்.
வெள்ளப் பெருக்கு காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Be the first to comment