புத்தாண்டில் இலங்கை வருகிறார் முக்கிய பிரமுகர்

இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் 2021 ஜனவரி 5 முதல் 7 வரை மூன்றுநாட்கள் பயணமாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கர் தனது வருகையின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ விஜயம் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகரின் முதல் வருகையை குறிக்கும் அதே வேளையில், இது புத்தாண்டில் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கான முதல் வெளிநாட்டு பயணமாகவும் திகழ்கிறது.

Be the first to comment

Leave a Reply