பாடசாலைக்குள் குளிர்பானங்களை தடைசெய்ய யோசனை முன்வைப்பு – அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்

பாடசாலைக்குள் குளிர்பானங்களைத் தடைசெய்ய யோ சனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களை கொரோனா தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயற்ற நோய்களிலிருந்து பாதுகாக்கக் கல்வி அமைச்சுடன் பல சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரி வித்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய நேற்று காலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது,

பாடசாலைகளில் இயங்கும் உணவகங்கள் மற்றும் சிற் றூண்டி ஆரோக்கியமான உணவை மட்டுமே விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாகவும், பாடசாலை களில் குளிர்பானங்களைத் தடை செய்ய எதிர்பார்க்கப் படுவதாகவும் அனுருத்த பதேனிய தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply