பணியிடங்களில் கொரோனா வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றுங்கள் – அஜித்ரோஹண

அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணியிடங்களில் கொரோனா சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றுங்கள் என பணியாளர் களிடம் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுவருடம் உதயமாகி இன்று அலுவலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பணியாளர்கள் பணிகளுக்காக பொது போக்குவரத்தில் செல்பவர்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதி பிரகாரம் செயற்படுங்கள்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ் நிலைக்கு மத்தியில் செயற்படும் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உட்பட்ட நிறுவனங்களில் கொ ரோனா தொற்றுக்கான சுகாதார வழிகாட்டிகளைச் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்பது தெரி யவந்துள்ளதாக அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப் பட்டுள்ள தாக அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் சரியான முறையில் சுகாதார வழிகாட்டிகளை பின்பற்றுமாறு சகல அலு வலங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் அஜித் ரோகண கேட்டுக்கொண்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply