நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் புதிய நோயாளர்கள் – பொலிஸ் பேச்சாளர் தகவல்

புதிய சிறிய கொத்தணிகள் உருவாகக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே சில பகுதிகளிற்கான தனிமைப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவரமுடியாத நிலை காணப்படுவதாக பொலிஸ்பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.
கொழும்பின் பல பகுதிகள் உட்பட பல இடங்களில் தனிமைப்படுத்தல் தொடந்து நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பகுதிகள் நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் அந்த பகுதிகளில் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் இதனால் புதிய கொத்தணி குறித்த அச்சம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சுகாதார வழிமுறைகளை உரிய விதத்தில் பின்பற்றினால் தனிமைப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் தொடர்வதால் சிலர் நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும் என குறிப்பிட்டுள்ள பொலிஸ்பேச்சாளர் அந்த பகுதிகளை சேர்ந்த மக்களை பொறுமையாகயிருக்குமாறும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டு;ள்ளார்.

Be the first to comment

Leave a Reply