
மாத்தளை பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி, வெற்றுத் தோட்டாக்களுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பகுதியில் நேற்று பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், வெற்று தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Be the first to comment