சட்டவிரோதமான மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோமாக மறைத்து வைக்கப்பட்டிருந்து பெருமளவிலான வெடிபொருட்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மீட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி,கே. பண்டார தெரிவித்தார்.

மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் சுவோத தலைமையில் கீழ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் புருசோத்தமன், ஆகியோரின் தகவலுக்கமைய பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமதரசிறி ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி,கே. பண்டார தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கரடியனாறு பதுளைவீதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோகிராம் அமோனியா, ஜெலனைட் குச்சி 729, சோவா வயர் 6 ஆயிரம் அடி, முலைவெடி 31, கரியம். 500 கிராம் என்பவற்றை முpட்டதுடன் ஒருவரை கைது செய்தனர் .

இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் லக்கி வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தனபதியாக ஜௌந்தன் படையனில் 1991 இருந்து 1994 வரை இருந்துள்ளதாகவும் பின்னர் குறித்த நபர் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுவருவதுடன் அதற்கான அனுமதிப்பத்திரத்துடன் கல்உடைப்பதற்கு வெடிபொருட்களை பயன்படுத்தி உடைத்துவந்துள்ளதாகவும். கடந்த மாதம் கல்உடைக்கும் அனுமதிப்பத்திரம் முடிவடைந்துள்ளதாகவும அதன் பின்னர் வெடிபொருட்களை கொள்வனவு செய்து சட்டவிரோதமாக வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply