இத்தாலியிலிருந்து வந்த பெண்ணின் மரணத்துக்கான காரணம் வெளியானது

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்து கண்டியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் கடந்த 2 ஆம் தகதி உயிரிழந்த நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் வெளிவந்துள்ளது.

குறித்த 52 வயதான தம்மிக்கா என்ற பெண் பன்னிபிட்டியில் வசிப்பவர்.அவரது கணவர் இத்தாலியில் உள்ளார்.

இந்த நிலையில் தனது மனைவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியுமாறு கணவன் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் அவரது திடீர் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம் என்றும், உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply