கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு இராணுவ அதிகாரிகளிடம்-ரவிகுமுதேஸ் அதிருப்தி

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை இராணுவத்தினரிடம் வழங்குவது குறித்து சுகாதார நிபுணர்களின் அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
சுகாதார துறை மற்றும் கொரோனாவைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை படைஅதிகாரிகளிடம் ஒப்படைப்பது கரிசனையளிக்கின்றது என சுகாதார நிபுணர்களின் அக்கடமியை சேர்ந்த ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவைரஸினை கட்டுப்படுத்துவது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது புதிய விவகாரங்களை உருவாக்குவதன் ஏற்கனவே பலவீனமாக உள்ள முகாமைத்துவத்தை மேலும் பலவீனப்படுத்துகின்றது என தெரிவி;த்துள்ளார்.
நிர்வாக விடயங்களை கையாள்வதற்காக ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என ரவிகுமுதேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply