யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர் கிளிநொச்சி சென்று கொரோனாவுடன் வந்தார்!

????????????????????????????????????

மருதனார்மடம் உப கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்பிலிருந்த ஒருவர், தெல்லிப்பழையிலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் அதனை மீறி அவர் வட்டக்கச்சி, இராமநாதபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதை அறிந்த சுகாதாரப் பிரிவினர் அவரை அங்கு தனிமைப்படுத்தியிருந்தனர்.

அவரது பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுராதபுரம் அனுப்பப்பட்டு இருந்தது. பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவரது மகள் குடும்பம் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் இராமநாதபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருதனார்மட உப கொத்தணியில் இதுவரை 139 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply