குளிர்கால பராமரிப்பே இல்லாம உங்களை ஜொலிக்க வைக்கும் அற்புதமான உலர் பழங்கள்!

குளிர்காலத்தில் வளிமண்டலத்திலிருந்து வரும் தூசுகள் சருமத்தை மேலும் மேலும் வறட்சியடைய செய்கிறது. சருமத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யும் உலர் பழங்கள் இந்த காலத்தில் தவிர்க்காமல் எடுத்துகொண்டால் நீங்கள் மிளிரும் சருமத்தை எளிதாக பெறமுடியும்.

முழுமையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் உலர் பழங்கள் அத்தியாவசிய கொழுப்புகள் நிறைந்திருப்பதால் சருமத்துக்கு சிறந்த முடிவை தரக்கூடியவை. அதனால் குளிர்கால உணவுகளில் முக்கியமாக சேர்க்க கூடிய ஐந்து உலர் பழங்கள் குறித்து பார்க்கலாம்.

பாதாம் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தவை. பாதாம் உலர்ந்த பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. மேலும் துத்தநாகம், வைட்டமின் இ, செலினியம் ஆகியவற்றின் சிறந்த இயற்கை மூலம் ஆகும். இதை எடுத்துகொள்ளும் போது இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்க செய்கிறது.

இந்த பாதாமை ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்தும் போது இது வறண்ட குளிர்கால நாட்களில் சருமத்தின் வறட்சியை தடுக்க கூடியதாக மென்மையாக மாற்றுகிறது. பாதாம் தினசரி 4 எடுத்துகொள்வதோடு அதை பாலோடு கலந்து பேக் செய்து சுமார் 20 நிமிடங்கள் வைத்து பின்னர் குளிர்ச்சியான நீரில் கழுவி எடுக்கவும்.கூந்தல் சிகிச்சைக்கும் பாதாம் எண்ணெய் சிறந்த பலன் தருகிறது.

அக்ரூட் பருப்புகள் ஆரோக்கியமான கொட்டைகளில் ஒன்று. இது குளிர்காலத்துக்கு அவசியம் தேவை. ஏனெனில் இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது குளிர்காலத்தில் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அதிலும் வறட்சியான கூந்தல் இருப்பவர்களுக்கு வால்நட் நல்ல தீர்வாக இருக்கும்.

இவை உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. உடலின் கொழுப்பு அளவை குறைக்க செய்கிறது. தினசரி வால்நட் பருப்புகள் எடுத்துகொள்வதால் அது உடலையும் சருமத்தையும் கூந்தலையும் மேம்படுத்துகிறது.

மிக முக்கியமாக இது சருமத்தை ஆரோக்கியமாக பிரகாசமாக வைக்க செய்கிறது. என்றும் இளமையாக சருமத்தை வைத்திருக்கவும் வயதாவதை தடுக்க செய்கிறது. இதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

அத்திப்பழம் வைட்டமின் சி இருப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும். இது ஆக்ஸிஜனேற்றம் கொண்டிருப்பதால் இது சருமத்தை மென்மையாக புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். அத்திப்பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியை சமன் படுத்த செய்ய உதவுகிறது. இதனால் சருமத்தின் மேல் அடுக்கு நீர் இழப்பு நேராமல் தடுக்கிறது. மேலும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதால் வறட்சியான சருமம் இல்லாமல் அழகாக பொலிவாக இருக்கிறது.

அத்திப்பழம் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் சரும சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க முடியும். மேலும் இது முகத்தில் இருக்கும் வடுக்களையும் கரும்புள்ளிகளையும் போக்க கூடியது. தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரும பிரச்சனை நீங்கும். இயற்கை மாய்சுரைசர் என்று அத்திப்பழத்தை சாப்பிடலாம்.

முந்திரிப் பருப்புகள் குளிர்காலத்துக்கு மற்றுமொரு சிறந்த பருப்புகள். இது சருமம் மற்றும் முடி இரண்டுக்கும் அதிகப்படியான நன்மை செய்யகூடியது. இரும்பு மற்றும் துத்தநாகத்தால் நிரம்பியுள்ளது. இது வைட்டமின் சி, துத்தநாகம், மெக்னீசியம், செலினியம் மற்றும் இரும்பு கொண்டிருக்க கூடியவை. இதை தினமும் அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து எடுத்துகொண்டால் முகம் பிரைட்டாக இருக்கும். சேதமடைந்த செல்களை புதுப்பிக்க கூடியவை.

இது பிரகாசமான தோற்றத்தை தரக்கூடியது. இதில் இருக்கும் செம்பு மற்றும் பாஸ்பரஸுடன் தலைமுடிக்கும் சிறந்த முடிவை தரக்கூடியவை. முந்திரியிலிருந்து எடுக்க கூடிய எண்ணெய் சருமத்துக்கு அதிசயங்களை செய்யகூடியது என்கிறது ஆய்வு.

பிஸ்தாக்கள் சுவையான பச்சை நிற கொட்டைகள். இதில் வைட்டமின்கள் மற்றும் இரும்பு, கால்சியம் , மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் வைட்டமின் இ உள்ளது. சருமம் நேரடியாக வெயிலில் ஈடுபடும் போது அல்ட்ரா வயலட் கதிர்கள் சருமத்தை பாதிக்க செய்கிறது. பிஸ்தாக்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் இ நிரம்பியுள்ளன.

இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க செய்கிறது. இளமையை தக்க வைக்கிறது. வயதான நிலையை தடுக்க செய்கிறது. ஆண்ட்ரோஜன் அளவை குறைக்க செய்கிறது. முகப்பருவை வரவிடாமல் செய்கிறது. குளிர்கால சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஐந்தையும் உணவில் சேருங்கள்.

Be the first to comment

Leave a Reply