மாநகர சபை நடந்தது இது தான்

வடக்கு மாகாணசபையில் இனப்படுகொலை குறித்து தீர்மானம் நிறைவேற்றினார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.
இது தன்னுடைய எஜமானுக்கு(அப்போது ரணில்) சங்கடத்தை கொடுக்கும் என்பதால் சுமந்திரனின் கோபத்திற்கு உள்ளானார் விக்கி.

வடமாகாண சபையை சும்மா விடமுடியாது என்று களத்தில் இறங்கிய சுமந்திரன் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரச்செய்தார்.

அப்போது சுமந்திரனின் கண்ணசைவிற்கு ஏற்ப நம்பிக்கையில்லா பிரேரணையை நெறிப்படுத்தியவர் இந்த ஆனோல்ட்.
அதற்கு சன்மானமாக ஆனோல்ட்டிற்கு மேயர் பதவியை வழங்க திட்டமிட்டார் சுமன்.

அப்போது மூத்த உறுப்பினர்கள் என்று பார்க்கையில் சிறிலுக்கே அந்த தகுதி இருந்தது. அவரை வெட்டிவிடுவதற்காக ஒரு காரணத்தை கண்டு பிடித்த அரசியல் சாணக்கியர், அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தி “வெளிநாட்டு பிரதிநிதிகள் வரும்போது அவர்களுடன் உரையாடி கருமமாற்றக்கூடியவரே மேயராக வேண்டும் என்று பீடிகை போட்டார்
தனது திட்டத்தின் அடுத்த கட்டமாக ஆனோல்டே மேயர் என்று தன்னிச்சையாக சுமந்திரன் அறிவிக்க மாவை அப்படி கட்சியில் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று மறுப்பறிக்கை விட்டார். மீண்டும் சுமந்திரன் “அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் ஆனோல்ட்தான் மேயர் “என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இன்று சுமந்திரனுக்கு ஆனோல்ட் பகையானதும் சிறிலை மேயராக்குமாறு கோரினார். முன்னர் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் உரையாட முடியாத சிறில் இப்போது மட்டும் வெளிநாட்டு பிரதிநிதிகளை கையாள முடியும் என்று எவ்வாறு கணித்தார் ? எல்லாம் சந்தர்ப்பவாதமே.

இதன் மூலம் சுமந்திரன் தனது கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு சொல்ல வருவது தனது நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்களை பதவியில் இருத்துவேன். அதேவேளை தனக்கு விசுவாசம் காட்டாத ஒருவரை எப்படியாவது பதவியில் இருந்து அகற்றுவேன்.
இதனை நன்கு புரிந்து வைத்துள்ள தமிழரசில் உள்ள பதவிக்காக அலையும் சில உறுப்பினர்கள் சரி பிழைகளுக்கு அப்பால் சுமந்திரன் என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்தி தாங்கள் அவருக்கு விசுவாசமானவர்கள் போல் காட்ட முயற்சிக்கின்றனர். இந்த சுயசிந்தனையற்ற ஜால்ரா அடிக்கும் இளையதலைமுறை கையில் நாளை தமிழ்த்தேசியம் சிக்கினால் அதோகதிதான்.

Be the first to comment

Leave a Reply