“அவதானமாக இருங்கள்” கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று கடும் மழை பெய்துள்ள நிலையிலேயே, இவ் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந் நிலையில், தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பன்னங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், கண்டாவளை மற்றும் உமையாள்புரம் உள்ளிட்ட பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply