யாழில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசியல்வாதிகளிடம் கும்பிட்டு மன்றாடிய தாய்!

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழில் தாயாரொருவர் பொது வெளியில் அரசியல்வாதிகளிடம் கும்பிட்டு மன்றாடிய காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனாத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கடந்த திங்கட்கிழமை(28) முற்பகல் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின்புறமாக அமைந்துள்ள நல்லை ஆதீனத்தின் முன்பாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன பீடாதிபதி தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த அரசியல் கைதியொருவரின் தாயாரொருவர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கும்பிட்டு மன்றாடியுள்ளார்.

“அரசியல் கைதிகளின் விடுதலை உங்கள் கைகளில் தான் இருக்கின்றது, நீங்கள் எல்லோரும் சேர்ந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேற்படி தாயார் இதன்போது தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply