மாணவியை மோதித்தள்ளிய முச்சக்கர வண்டி!

வெள்ளைக்கடவையில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது முச்சக்கரவண்டி மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் காயமுற்ற பாடசாலை மாணவி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை தமிழ் மகாவிதியாலயத்திற்கருகிலுள்ள வெள்ளைக் கடவையிலேயே நேற்று மாலை 04 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திம்புள்ள பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டியே மாணவி மீது மோதியுள்ளது. கொட்டகலை ஸ்டோனிகிளிப் பாடசலையில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவியே இந்த விபத்தில் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டியின் சாரதி இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply