உலகமே புது வருடத்தை வரவேற்றுக்கொண்டிருக்க ரஜினி வீட்டின் முன்பு பெரும் சோகம்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த், தமது உடல் நிலை மற்றும் நாட்டினுள் நிலவும் கொரோனா சூழல் காரணமாக, தன்னால் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை; இந்த முடிவு தம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும், மன்னியுங்கள் என்று அறிவித்து, கொடுத்த வாக்கை காப்பதற்காக அரசியலுக்கு வந்து தன்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று அறிக்கை ஒன்று வெளியிட்டு அரசியலுக்குள் வரும் முடிவை கைவிட்டார்.

இந்நிலையில், ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர வலியுறுத்த, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு முன்பாக, முருகேசன் என்பவர் தீக்குளிக்க முயற்சித்த நிலையில், அவரை பொலிசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply