புத்தளத்தில் திடீரென வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்!

புத்தளம் மாவட்டம் முத்துபந்தி தீவில் சுமார் மூன்றடி உயரமான கடல் நீர் தீடீரென கரை புகுந்ததாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பகுதியிலுள்ள வீடுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளதால் அவசர நிலைமை ஏற்பட்டது.

மேலும், குறித்த தீவின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கல் வேலியில் இருந்த கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், கடல் அலையுடன் வந்த குப்பைகள் வீடுகளுக்கு அருகில் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply