நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர், கொழும்பு – 15 பகுதி யைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் ஆகியோர் கொ ரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

01. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனு மதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் காரணமாக 2020 டிசம்பர் 30 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.

02.கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனு மதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலை யில் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கல்லீரல் நோய் மற்றும் கொரோனா தொற்றால் இரத்தம் விஷமானதால் 2020 டிசம்பர் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03.கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனு மதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலை யில் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று , கடுமையான சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத் தத்தால் ஏற்பட்ட மாரடைப்பால் 2020 டிசம்பர் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

04.கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்ட போது கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் நீரிழிவு நோயால் 2020 டிசம்பர் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply