மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம்!

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

முடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகள் தொடர்பாகவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

தற்போதைய நிலையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திலும் பாடசாலைகளை திறப்பது சற்றுக் கடினம். சுகாதார நிலைமை குறித்து நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம்.

இயலுமான வரையில் விரைவாக பாடசாலைகளைத் திறப்போம். முடக்கப்படாத ஏனைய பிரதேசங்களில் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை, என்றார்.

Be the first to comment

Leave a Reply