திருகோணமலையில் பெட்ரோல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்!

திருகோணமலையில் பெட்ரோல் அடித்துவிட்டு நகர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென்று சுருண்டுவிழுந்து மயங்கிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இலிங்க நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த இளைஞர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் அடித்துவிட்டு சிறு தூரம் சென்றுள்ளார்.

பின்னர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு பொலிசாரின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

திருகோணமலை இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு மயங்கி விழுந்ததுடன் அவருக்கு அருகில் சென்று உதவி செய்வதற்கு அங்கிருந்தவர்கள் பயந்த நிலையில் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவருக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply