இலங்கையின் ஜனாஸா விவகாரம்: பிரித்தானிய முஸ்லிம் அமைப்புக்கள் எடுக்கவுள்ள நடவடிக்கை

கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தங்களின் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற நபர்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக பிரித்தானியாவின் முஸ்லிம் பேரவை சட்ட நடவடிக்கைகளில் ஈடுபவுள்ளதாக த கார்டியன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதற்காக பிரித்தானிய முஸ்லிம் பேரவை விசேட குழு ஒன்றை நியமித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம்களுடைய மரபினை மீறி கொரோனா தொற்றினால் மற்றவர்களுடைய சரீரங்கள் தகனம் செய்யப்படுகின்றன.

இதன் ஊடாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளையும் சர்வதேச விதிகளையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மீறி இருப்பதாக பிரித்தானிய முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த இந்த தீர்மானத்தை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கோரி பிரித்தானிய வெளிவிவகார செயலகம் மற்றும் பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஆகியவற்றுக்கு பிரித்தானிய முஸ்லிம் பேரவை கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளது.

Be the first to comment

Leave a Reply