மருதனார்மடம் கொத்தணி: மேலும் 8 பேருக்கு தொற்று

யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தைக் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.ஆர். பரிசோதனையின்போது உடுவிலைச் சேர்ந்த ஐவர், கீரிமலையைச் சேர்ந்த ஒருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த ஒருவர், சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் என 8 பேருக்குக் கொரோனாத்தொற்று உறுதியாகியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதன்படி மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply