வாள்வெட்டு குழு தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞர்

தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி வீரமுனையில் முன் விரோதம் காரணமாக 10 பேர் கொண்ட குழுவினர் வீதியில் நின்ற இளைஞரை தாக்கியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றிருந்தனர், இதனையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசேட குழு மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் நாளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் தலைமறைவாகியுள்ளவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை விசாரணைக்குழுவினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply