சுகாதார வழிகாட்டுதல்களை மீறிய 50 பேருந்துகளின் அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தம்

கொவிட்-19 பரவலைத் தடுக்க முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத 50 பேருந்துகளின் அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாத பேருந்துகளை அடையாளம் காண்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

“சில டிப்போக்களில் ஒன்றிரண்டு பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாம் சாரதிகள், நடத்துனர்கள் என 68 பேரை தனிமைப்படுத்த வேண்டியிருந்தது. இ.போ.சபை பேருந்துகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றன. 90 வீதமான தனியார் பேருந்துகளும் அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றன” என அவர் மேலும் கூறினார்.

Be the first to comment

Leave a Reply